2025 மே 03, சனிக்கிழமை

இயந்திரம் மூலம் விதைப்பு முறை அறிமுகம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 30 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரி.எல்.ஜவ்பர்கான்


விவசாய திணைக்களத்தினால் இயந்திரத்தின் மூலம் விதைப்பு மேற்கொள்ளும்முறை செவ்வாய்க்கிழமை
அறிமுகப்படுத்தப்பட்டது. மட்டக்களப்பு ஊறணி பிரதேச வயலில் இந்நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள உதவி பணிப்பாளர் இரா.ஹரிகரன் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண விவசாய திணைக்கள பணிப்பாளர் எம்.ஹூசைன் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை விவசாய திணைக்கள பணிப்பாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இவ் இயந்திரத்தின் மூலம் ஒரு தடவைக்கு 70 கிலோ நெல்லை விதைக்க முடியுமென விவசாய அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடகிழக்கு பருவ மழையை நம்பி இம்மாவட்டத்தில் தற்போது பெரும்போக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட விவசாயிகள் இவ் இயந்திரத்தை விதைப்பு நடவடிக்கைக்காக இலவசமாக பெறமுடியுமென மாவட்ட விவசாய திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X