2025 மே 03, சனிக்கிழமை

'மதுபாவனையாலும் பெண்கள் வெளிநாடு செல்வதாலும் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது'

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 30 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துக் காணப்படும மது பாவனையாலும் வெளிநாட்டுக்குப் பெண்கள் செல்வதினாலும் பிள்ளைகளின் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படுவதுடன், அவர்கள் உள மற்றும் உடல் ரீதியாகவும் பாதிப்புக்களை எதிர்நோக்குவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலக அரசாங்க அதிபர் பணிமனையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற முன்பள்ளி பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான கடமை முன்னேற்ற மீளாய்வு மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சினால் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.  மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களிலும் கடமை புரியும் முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X