2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் 'உள்ளூராட்சிமன்ற வலையமைப்பு'

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 31 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்களையும் உள்ளூராட்சிமன்ற வலையமைப்பு எனப்படும் அரசாங்க வலைப்பின்னலுக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

இதற்காக பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தினூடாக பிரதேச செயலகங்களில் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகளை கணினி மயப்படுத்தி அதன் மூலம் பிரதேச செயலக தகவல்களை பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சும் அதன் கீழுள்ள திணைக்களங்களும் அறிந்து கொள்ளவும் அதேபோன்று, பிரதேச செயலகங்கள் பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினதும் அதன் திணைக்களங்களினதும் சுற்றறிக்கைகள் மற்றும் விபரங்களை அறிந்து கொள்ளவும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டை, பதிவுச் சான்;றிதழ்கள், ஓய்வூதியம் போன்ற விடயங்கள் இதன் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதற்காக ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் கருவிகள் பொருத்தப்பட்டு 5 கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. இதை நடைமுறைப்படுத்துவதற்காக பிரதேச செயலகங்கள் தோறும் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களுக்கு இது தொடர்பிலான பயிற்சிகளும் 14 நாட்கள் வழங்கப்பட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .