2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

அனைத்து அருங்காட்சியகங்களும் திங்கட்கிழமைகளில் பூட்டு

Simrith   / 2025 ஓகஸ்ட் 13 , பி.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு தேசிய அருங்காட்சியகம் உட்பட தேசிய அருங்காட்சியகங்கள் திணைக்களத்தின் கீழ் உள்ள அனைத்து அருங்காட்சியகங்களும் செப்டம்பர் 1, 2025 முதல் திங்கட்கிழமைகளில் மூடப்படும் என்று தேசிய அருங்காட்சியகங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பராமரிப்பு பணிகளுக்காக திங்கட்கிழமைகளில் அருங்காட்சியகங்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினம், சிங்கள மற்றும் இந்து புத்தாண்டின் இரண்டு நாட்கள், மே தினம் மற்றும் வெசாக் போயா தினம் ஆகிய நாட்களில் அருங்காட்சியகங்கள் மூடப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தேசிய அருங்காட்சியகம் மற்றும் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் மற்ற நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை திறந்திருக்கும் என்றும், மாகாண அருங்காட்சியகங்கள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை திறந்திருக்கும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .