2025 மே 03, சனிக்கிழமை

பொலிஸாருக்கு கல்வி ரீதியான கல்லூரியொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை

Kogilavani   / 2013 ஒக்டோபர் 31 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

'பொலிஸாருக்கு தனியான கல்வி ரீதியான கல்லூரியொன்றை மிக விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம். ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரினது ஆலோசனையிலும் பொலிஸ் மா அதிபரின் அனுமதியுடனும் பல வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என என சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளை புதன்கிழமை மட்டக்களப்பில் வைத்து சந்தித்து உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 

'நாட்டிலுள்ள பொலிஸ் நிலையங்களின் செயற்பாடுகளை கணினிமயப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கு உண்டு. அந்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும். பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு செய்வதற்காக வரும் பொதுமக்களுடன் பொலிஸ் அதிகாரிகள் கடுகடுப்பாக நடந்துகொள்ளக் கூடாது'

'பொலிஸ் நிலையங்களை நாடிவரும் பொதுமக்களின் தேவைகளை இலகுவாக நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். பொறுப்புடனும் நீதியுடனும் நேர்மையாகவும் நடந்து கொள்வதன் மூலம் பொலிஸ் நிலையங்களை சிறப்பாக கட்டியெழுப்பமுடியும்' என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் கபில உபேசேகர, மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வி.இந்திரன், மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேவன் சில்வா உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X