2025 மே 03, சனிக்கிழமை

மட்டு. வைத்தியசாலையில் இலவச பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை முகாம்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 01 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இலவச பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை முகாமொன்றை டிசெம்பர் மாதம்  4ஆம் திகதி முதல் 19ஆம் திகதிவரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு றொட்டரிக்கழகமானது ஜேர்மன் ஹெல்ப் பவுண்டேஸன் அமைப்பின் அனுசரணையுடன் இந்த பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை முகாமை நடத்தவுள்ளது.

இங்கிலாந்து நாட்டிலுள்ள இன்ரர்பிளாஸ்ட் எனும் மருத்துவர் குழு இந்த பிளாஸ்டிக் சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ளவுள்ளன.

இந்த சத்திரசிகிச்சைகளின் கீழ் உதடு, அண்ணப்பிளவு, மற்றும் எரிகாயங்களால் ஏற்பட்ட அகோரமான வடுக்கள், பிறப்பிலுள்ள குறைபாடுகள் ஆகிய வற்றுக்கான சீரமைப்பு சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த சத்திரசிகிச்சை தேவைப்படுபவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலுள்ள சத்திரசிகிச்சை வைத்திய நிபுணரான டாக்டர் ஜீபராவின் கிளினிக்கிள் செவ்வாய்க்கிழமைகளில் காலை 8 மணி முதல் பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு மட்டக்களப்பு றொட்டரிக்கழகத்தின் தலைவர் எஸ்.சரவணபவன் தெரிவித்தார்.

குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய  நோயாளர்களுக்கு இந்த சத்திர சிகிச்சைகள் செய்யப்படவுள்ளதால் முன்கூட்டியே பதிவுகளை மேற்கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X