2025 மே 02, வெள்ளிக்கிழமை

மன்னிப்புக் காலத்தினுள் நாடு திரும்ப முடியாதவர்களை திருப்பியழைக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 10 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

சவூதி அரேபியாவில் வழங்கப்பட்ட மன்னிப்புக் காலத்திற்குள் நாடு  திரும்ப முடியாமல் சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் காத்தான்குடியைச் சேர்ந்தவர்களை நாட்டுக்கு திருப்பி அழைப்பதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி நகர சபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

சவூதி அரேபியாவில் வழங்கப்பட்ட மன்னிப்புக் காலத்திற்குள் நாட்டுக்கு திரும்ப முடியாதவர்களில் காத்தான்குடியைச் சேர்ந்த சிலரும் உள்ளதுடன்,  அவர்கள் பல அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருக்கின்றமை தொடர்பில்  தனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில், காத்தான்குடியைச் சேர்ந்த இவ்வாறானவர்களின் விபரங்களை தான் திரட்டியுள்ளதாகவும் அவர் கூறினார். 

இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் டிலான் பெரேரா மற்றும் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் கவனத்திற்கு தான் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சவூதி அரேபியாவில் சட்டபூர்வமற்ற முறையில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் வெளியேறுவதற்கு சவூதி அரேபியா வழங்கியிருந்த மன்னிப்புக்காலம் கடந்த 2ஆம் திகதியுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .