2025 மே 02, வெள்ளிக்கிழமை

காத்தான்குடியிலுள்ள ஹோட்டல்கள், உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகளுக்கு அறிவுறுத்தல் கடிதங்கள்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 11 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி நகரசபைப் பிரிவிலுள்ள அனைத்துக் ஹோட்டல்கள், உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் ஆகியவற்றுக்கு காத்தான்குடி நகரசபை அறிவுறுத்தல் கடிதங்களை அனுப்பிவைத்துள்ளது.

காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.முகம்மது அஸ்பரின் கையொப்பத்துடன் 8.11.2013 என திகதியிடப்பட்டு மேற்படி கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

மேற்படி கடிதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'காத்தான்குடி நகரசபைப் பிரிவிலுள்ள அனைத்து உணவகங்களிலும் சிகரெட் விற்பனை மற்றும் பாவனையை தடை செய்தல், அனைத்து உணவகங்களிலும்  பொரித்த எண்ணெயின் மீள்பாவணையை முற்றாகத் தடைசெய்தல், அனைத்துக் ஹோட்டல்கள், உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் ஆகியவற்றில் கை துடைப்பதற்கும் உணவுகளைப் பொதி செய்வதற்கும் அச்சிடப்படாத கடதாசிகளை மட்டுமே உபயோகிக்க வேண்டும், அச்சிடப்பட்ட வர்ணக் கடதாசிகள் பாவனையை முற்றாக தடைசெய்தல், தேசிய நீர்வழங்கல்; வடிகாலமைப்புச் சபையினூடாக விநியோகிக்கப்படும் நீரையே குடிநீருக்காகவும் உணவகங்களின் பாவனைக்காகவும் பயன்படுத்த வேண்டும்.

மேலும், மேற்படி அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்தத் தவறும் ஹோட்டல்கள், உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் ஆகியவற்றின்; உரிமையாளர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

காத்தான்குடி நகரசபையின் 44ஆவது அமர்வில் ஏகமனதாக எடுக்கப்பட்ட இந்தத் தீர்மானங்களை முற்றுமுழுதாக பொதுமக்களின் நலன் கருதிய உணவு தயாரித்தலை நடைமுறைப்படுத்தும் இந்த ஆரம்ப நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பை நல்குமாறும் பிள்ளைகளின் நோயற்ற எதிர்கால நல்வாழ்வுக்கு உத்தரவளிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

இந்தத் தீர்மானங்கள் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரியின் ஆலோசனையுடன் எடுக்கப்பட்டுள்ள' ' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .