2025 மே 02, வெள்ளிக்கிழமை

பொதுநலவாய பிரதிநிதிகள் வருகை ரத்து: மட்டு.சிவில் பிரதிநிதிகள் கவலை

Kanagaraj   / 2013 நவம்பர் 16 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்


மட்டக்களப்பு மாவட்டத்துக்கு பொதுநலவாய மாநாட்டு பிரதிநிதிகள் வருகை ரத்துச்செய்யப்பட்டமையானது மட்டக்களப்பு மாவட்ட மக்களை பெரும் கவலையடையச் செய்துள்ளதாகவும் ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன் இதன் பின்னணியில் ஏதோ ஒரு சக்தி செயற்பட்டுவருவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் மட்டக்களப்பு ஆயர் இலத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தனர். இந்த சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஜோசப் ஆண்டகை கருத்து


இது தொடர்பில் கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் போசகரும் மட்டக்களப்பு மாவட்ட மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை,

பொதுநலவாய மாநாட்டு பிரதிநிதிகள் மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளதாக எங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதுடன் அவர்களை வரவேற்று அவர்களுக்கான தேவையினை பூர்த்திசெய்யும் பணிகளை செய்யுமாறு பணிக்கப்பட்டது.

அவ்வாறான நிலையில் அதற்கான ஏற்பாடுகள் பூரணமாக பூர்த்திசெய்யப்பட்ட நிலையில் திடிரென அவர்களின் வருகை ரத்துச்செய்யப்பட்டதாக எங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் எதனைசெய்ய முயற்சிகளை செய்தாலும் அதற்கு ஒரு முட்டுக்கட்டையிடப்படுகின்றது. யாரோ எங்கிருந்துகொண்டு தடைகளை ஏற்படுத்திக்கொண்டுள்ளனர்.முதலில் இவை நிவர்த்திசெய்யப்படவேண்டும்.பொதுநலவாய மாநாட்டு பிரதிநிதிகள் இங்கு வருகைதராதது எங்களுக்கு மிகுந்த கவலையளிக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டம் பல வழிகளிலும் பாதிக்கப்பட்ட மாவட்டமாகும்.இயற்கை அனர்த்தமாகட்டும் செயற்கை அனர்த்தமாகட்டும் யுத்தமாகட்டும் அதிகளவில் பாதிக்கப்பட்ட மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ளது.அவர்கள் நேரில் வரும்போதே இந்த மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகளை அவர்கள் காணக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டவேளையில் இங்கு பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் வருகைதந்து அனர்த்தங்களை பார்வையிட்டு சென்றிருந்தார்.அதுதொடர்பில் எங்களது மகிழ்ச்சியை தெரிவித்திருந்தோம்.அவர் இந்த மாவட்டத்துக்கு வருவார் இங்கு அபிவிருத்திக்கு ஏதாவது செய்வார் என எதிர்பார்த்தோம்.ஆனால் எல்லாம் இலகுபார்த்த கிளிபோல் ஆகிவிட்டது என்றார்.

தலைவர் மாமாங்கராஜா கருத்து

இங்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் மாமாங்கராஜா,

ஒரு மாத காலத்துக்கு முன்பே இதன் தேசிய அமைப்பாளராக செயற்பட்ட சந்திரபால என்பவர் ஒரு மாத காலத்துக்கு முன்பே வந்து இங்கு இங்கிலாந்து இளவரசர் சார்ள்ஸ் அவர்கள் தலைமையிலான குழவினர் விஜயம் செய்யவுள்ளனர்.அந்த வேளையில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பினராகிய நீங்கள் அவர்களை சந்தித்து மட்டக்களப்பு மாவட்டத்தின் இன்றைய நிலை தொடர்பில் கூறலாம் என தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் நாங்கள் பெரும் சந்தோசமடைந்தோம்.இதனை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி இந்த மாவட்டத்தில் எதிர்கொண்ட அழிவுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் ஒட்டுமொத்தமாக அவர்களின் கவனத்துக்கு கொண்டுசெல்ல பெரும் ஆவலுடன் இருந்தோம்.
உலக தலைவர்களை வரவேற்கும் பணிகள் கூட எங்களுக்கு தரப்பட்டிருந்தது.உலக தரத்தில் அவர்களை வரவேற்பதற்கான பணிகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.இதற்கு சுமார் ஒரு மில்லியன் ரூபா வரையில் செலவுசெய்யப்பட்டிருந்தது.

இந்த வருகைரத்துச்செய்யப்பட்டமையான பெரும்பாலான பிரதிநிதிகள் மட்டக்களப்புக்கு வருகைதர விருப்பம் கொள்ளவில்லையென்ற காரணம் தெரிவிக்கப்பட்டது.அனைவரும் வடபகுதிக்கு செல்லவே விருப்பப்பட்டதாகவும் தேசிய அமைப்பாளர் சந்திரபால கவலையுடன் தெரிவித்தார்.
புpரதிநிதிகள் செல்லும் இடம் தொடர்பில் வைக்கப்பட்டிருந்த பதிவேட்டில் ஐந்து பிரதிநிதிகளே மட்டக்களப்பு விஜயம் செய்ய விருப்பம் தெரிவித்து அதில் பதிவை செய்துள்ளதாகவும் அவர் என்னிடம் தெரிவித்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .