2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மகாத்மா காந்தி பூங்காவும் நீருற்றுப் பூங்காவும் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 18 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், மாணிக்கப்போடி சசிகுமார்
, எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு நகரத்தில் நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி பூங்கா மற்றும் மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத்திற்கு முன்பாக நிர்மாணிக்கப்;பட்டுள்ள நீருற்றுப் பூங்காவும் இன்று திங்கட்கிழமை (18) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளன.

மகாத்மா காந்தி  பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை இதன்போது  அணிவிக்கப்பட்டது.

'தேசத்திற்கு மகுடம்' திட்டத்தின் கீழ் 28 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி பூங்காவில் ஓய்வு எடுப்பதற்கான இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளதுடன், பூமரங்களும்  நாட்டப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வுகளில் பிரதி அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக், மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் கே.சிவநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .