2025 மே 02, வெள்ளிக்கிழமை

மீனவர்களுக்கு நவீன தொழில்நுட்பவியல் உதவி

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 20 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான், எஸ்.பாக்கியநாதன்

எரிபொருள் விலையேற்றம் காரணமாக மீனவர்களுக்கு இதுவரைகாலமும் வழங்கப்பட்டுவந்த எரிபொருள் மானியத்திற்குப் பதிலாக நவீன தொழில்நுட்பவியல் உபகரணங்களுடன் இதற்கான தொழில்நுட்பவியல்  உதவிகளும் வழங்கப்படவுள்ளன.

கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள அலுவலகத்திற்கு இது சம்பந்தமான சுற்றுநிரூபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.

இது தொடர்பில் விளக்கமளிக்கும் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைக் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 367 பல்தின மீன்பிடிக்கலங்கள், 60 ஒருநாள் மீன்பிடிக்கலங்கள், 1200 வெளியிணை இயந்திரப் படகுகள் உட்பட 1600 படகுகளுக்கு இதுவரை காலமும் மாதமொன்றிற்கு சராசரியாக 30 மில்லியன் ரூபா எரிபொருள் மானியமாக மீனவர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்த நிலையில், புதிய சுற்றுநிரூபத்தின்படி மாதாமாதம் வழங்கப்பட்;ட இத்தொகை மொத்தமாக ஒருவருடத்திற்குரிய முழுப்பணமாக  உபகரணங்கள் வாங்குவதற்கு வழங்கப்படவுள்ளன. இதற்காக வருடத்திற்கு 1600 படகுகளுக்கும் சராசரியாக 287 மில்லியன் ரூபா ஒதுக்கிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .