2025 மே 02, வெள்ளிக்கிழமை

இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 28 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டுவரும் வீட்டுத்திட்டம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இந்த மீளாய்வுக் கூட்டம்  நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதன்போது பிரதேச செயலக ரீதியான முன்னேற்ற மீளாய்வுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், இந்தத் திட்டம் தொடர்பான மதிப்பீடுகளின்போது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட வேண்டிய விதிகள் பற்றியும்  கலந்துரையாடப்பட்டன.

அத்துடன், இவை பற்றி இந்திய அரசாங்கத்தின்  திட்டக் கண்காணிப்புப் பிரிவு மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பிப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

இதன்போது  பிரதேச செயலாளர்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்குரிய  தீர்வுகள் அரசாங்க அதிபரால் வழங்கப்பட்டன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 46,000 வீடுகளை அமைத்துக் கொடுக்கும் இந்திய அரசாங்கத்தின்; உதவித் திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட 4,000 வீடுகள் முறையே மட்டக்களப்பு மாவட்டத்திற்கு  2,000 வீடுகளும் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு தலா 1,000 வீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசசார்பற்ற தொண்டு நிறுவனமான ஹியூமினிற்றி ஹபிடாட் நிறுவனம் இந்த வீட்டுத் திட்டத்தைக் கட்டி முடிப்பதற்கு உதவதுடன்;, மக்களின் பங்களிப்புடனும் 05 இலட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபா செலவில் இந்த வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன.

இந்த வீடமைப்புத் திட்டம் எதிர்வரும்  2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வீட்டுத்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான ஆரம்ப வேலைத்திட்டம் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள  03 கிராமங்களில் கடந்த மே மாதம் 22ஆம் திகதி தொடக்கி வைக்கப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .