2025 மே 02, வெள்ளிக்கிழமை

களுவாஞ்சிகுடி மணல்வீதியை புனரமைக்குமாறு மக்கள் கோரிக்கை

Kogilavani   / 2013 நவம்பர் 28 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிகுடி மணல்வீதி மிக நீண்ட காலமாக புனரமைப்புச் செய்யப்படாமல் உள்ளதால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

ஆலயம், களுவாஞ்சிகுடி பொதுச்சந்தை, பட்டிருப்பு தேசியப் பாடசலை, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை, கமநல சேவைகள் திணைக்களம், நீர்பாசனத் திணைக்களம், அரச திணைக்களங்கள் போன்றவற்றுக்கு செல்வதற்காக இவ்வீதியையே பொதுமக்களும்
பிரயாணிகளும், பாடசாலை மாணவர்களும், பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது மழை காலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளளமையால் இவ்வீதியில் மழைநீர் நிரம்புவதாகவும் இதனால் தாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அடைமழைக் காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் இவ்வீதியினை உரிய வகையில் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .