2025 மே 01, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் குற்றச்செயல்களை தடுக்க ஒலிபெருக்கி மூலம் பொலிஸார் எச்சரிக்கை

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 10 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் திருட்டு, கொள்ளை, வீடுடைப்பு, சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் விபத்து போன்றவற்றைத் தடுப்பதற்கு பொதுமக்களுக்கு கிராமங்கள் தோறும் ஒலிபெருக்கி மூலம் மாவட்ட தலைமையப் பொலிஸார் அறிவுறுத்தி வருகின்றனர்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் திருடர்கள் சம்பந்தமாக எச்சரிக்கையாக இருக்கமாறும் பொதுமக்களை பொலிஸார் கோரியுள்ளனர். அறிமுகமில்லாதவர்கள், சந்தேகத்திற்கிடமான முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களைக் கண்டால் உடன் பொலிஸாருக்குத் தகவல் தருமாறும் அத்தகையோரை கண்காணிப்புச் செய்யுவதுடன் எச்சரிக்கையாய் இருக்குமாறும் கோரியுள்ளனர்.

பழைய பொருட்கள் கொள்வனவு செய்ய வருவோர் மற்றும் பொருட்களை விற்பனை செய்ய வீட்டுக்கு வருவோர் பற்றியும் கவனமாக இருக்குமாறும் வீட்டில் சந்தேகத்திற்கிடமானவர்கள் வந்தால் கதவினைத் திறக்க வேண்டாம் எனவும் விசாரணைகளுக்காக வரும் பொலிஸார் சீருடையிலேயே வருகை தருவர் என்றும் அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டால் அவர்களிடம் அதற்கான அத்தாட்சிகளை கேட்கும் பட்சத்தில் அவர்கள் அவற்றை உறுதிப்படுத்துவர் என்றும் பொலிஸார் இதன்போது குறிப்பிட்டனர்.

வீட்டில் நெருக்கமாக அமைந்துள்ள உயர்ந்த மரங்களை அகற்றிவிடுவது சிறந்த பாதுகாப்பானதென்றும் பெண்கள் பிரயாணங்களை மேற்கொள்ளும்போதும் நகைகள் அணிவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் பஸ் பிரயாணங்களை மேற்கொள்ளும் போது நெருங்கி இடைஞ்சல் விளைவிப்பவர்கள் மீது கவனமாக இருக்குமாறும் சிறுவர்களை தனியே எங்கும் அனுப்ப வேண்டாம் என்றும் குடும்ப அங்கத்தவர்கள் தவிர்ந்த எவருடனும் வெளியே செல்ல அனுமத்திக்க வேண்டாம் எனவும் கோரியுள்ளனர்.

விபத்து தொடர்ந்து அதிகரித்து வருவதனால் பொலிஸார் கடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதனால் பாதசாரிகளும் சாரதிகளும் போக்குவரத்து நடைமுறைகளை சரியாக பின்பற்றுமாறும் மஞ்சள் கடவைகளை சரியாக பயன்படுத்துமாறும் இரவில் பயணிக்கும் துவிச்சக்கர வண்டிகளுக்கு வெளிச்ச உபகரணங்கள் கட்டாயம் பயன்படுத்துமாறும் சமாந்தரமாக பயணிப்பதை தவிர்க்குமாறும் பொலிஸார் மேலும் அறிவித்தியுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .