2025 மே 02, வெள்ளிக்கிழமை

பாம்பு தீண்டியதில் இரண்டு மாத சிசு மரணம்

Kanagaraj   / 2013 டிசெம்பர் 16 , மு.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன், க.ருத்திரன்

மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னதட்டுமுனையில் பாம்பு தீண்டியதனால் இரண்டு மாதங்களேயான சிசுவொன்று உயிரிழந்துள்ளது.

சின்னதட்டுமுனையை சேர்ந்த கிருஸ்ணரட்னம் அக்ஸன் என்ற இரண்டு மாதங்களும் 14 நாட்டுகளுமான சிசுவே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குறித்த சிசு, பால் கட்டி உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை வைத்தியசாலைக்கு நேற்று கொண்டு செல்லப்பட்ட நிலையில் அது பாம்பு தீண்டியதாலேயே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சிசுவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .