2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

இந்து ஆலயங்களில் கொள்ளை

Super User   / 2013 டிசெம்பர் 22 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள இரண்டு இந்து ஆலயங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உடைக்கப்பட்டு அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

300 வருடங்கள் பழைமை வாய்ந்த ஆரையம்பதி எள்ளிச்சேனை பிள்ளையார் ஆலயம் மற்றும் 100 வருடங்கள் பழைமை வாய்ந்த ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயம் ஆகியனவே உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் ஆலய பரிபாலன சபையினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .