2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு பயிற்சி

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 23 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


வன்னியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகள் தங்களது தகைமையினை அதிகரித்துக்கொள்ளும் வகையிலான நடவடிக்கைகளை தேசிய வை.எம்.சி.ஏ. மேற்கொண்டுள்ளது. இதன் கீழ் முதன்முறையாக தெரிவு செய்யப்பட்ட 15 இளைஞர் யுவதிகளுக்கு ஆங்கில மொழி மற்றும் கணினி பயிற்சிகள் வழங்கப்பட்டன.

முழுநேர வதிவிட பயிற்சியாக நடத்தப்பட்ட இந்த பயிற்சி நெறியை பூர்த்திசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு - பெரியகல்லாறு வை.எம்.சி.ஏ. தொழிற்பயிற்சி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

வை.எம்.சி.ஏ.யின் கமம் போக்ஸ் உயர் பாடசாலையின் மூலம் நடத்தப்பட்ட இந்த பயிற்சி நெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அதன் அதிபர் திருமதி ஹேமா சுதர்ஷன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கை வை.எம்.சி.ஏ.யின் தேசிய பொதுச்செயலாளர் லக்ஷான் டயஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக பெரியகல்லாறு பங்குத்தந்தை அருட்தந்தை அம்புரோஸ் அடிகளார் கலந்துகொண்டார்.

இதன்போது பயிற்சிறை நிறைவுசெய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் மூவினங்களையும் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டதுடன் வன்னியில் இருந்து மாணவர்களின் பெற்றோரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .