2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

தர்கா உண்டியல் உடைத்து பணம் திருடியவர் கைது

Kanagaraj   / 2014 ஜனவரி 04 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு கோட்டைமுனை ஷாதுலியா தர்கா கபுறடி (இறைநேசர் அடக்கஸ் தலத்தில்) உண்டியலை நேற்று பகல் உடைத்துத் திருடிய அப்ரார் நகர் காத்தான்குடி 6 ஐச் சேர்ந்த 38 வயதான நபர் ஒருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தங்களிடம் ஒப்படைத்துள்ளதாக  மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

அடக்கஸ் தலத்தை ஒட்டியதாக இருந்த உண்டியலை உடைத்து திருடிக்கொண்டு வெளியே ஓட முயன்ற போது அதனை கண்ட மக்கள் அவரை துரத்திப் பிடித்துள்ளனர்.

அவரிடமிருந்து, உண்டியலை உடைப்பதற்குப் பாவித்த உளி மற்றும் உண்டியலில் இருந்த 2500 ரூபாய் பணம் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .