2025 மே 02, வெள்ளிக்கிழமை

'சமாதானத்திற்கு முஸ்லிம்கள் உதவியாக இருக்கவேண்டும்'

Kanagaraj   / 2014 ஜனவரி 24 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


இலங்கையில் நிலவுகின்ற சமாதானத்தில் தான் காத்தான்குடிக்கு வரமுடிந்துள்ளது. இந்த சமானத்தை நிலைபெறசெய்வதற்கும் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கும் முஸ்லிம்கள் உதவியாக இருக்கவேண்டும் என்று ஈராக் நாட்டின் பக்தாதை சேர்ந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர் அஸ்ஸெய்ஹ் அபீபுத்தீன் பக்தாதி தெரிவித்தார்.

ஏறாவூர் நகர சபை தலைவர் அலிசாஹீர் மௌலானா அவர்களின் அழைப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம்செய்த இஸ்லாமிய மார்க்க அறிஞர் அஸ்ஸெய்ஹ் அபீபுத்தீன் பக்தாதி காத்தான்குடிக்கு இன்றுக்காலை விஜயம் செய்தார்.

இவருக்கு காத்தான்குடி பத்ரிய்யா ஜும் ஆ பள்ளிவாயலில் வரவேற்பளிக்கப்பட்டது. இதன்பின்னர் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

உங்களையெல்லாம் சந்திப்பதில் எமக்கு பெருமகிழ்ச்சியாக இருக்கின்றது. இந்த நாட்டில் இருக்கின்ற  சகல இனங்களும் சமாதானத்துடன் ஒற்றுமையாக வாழவேண்டும். அதற்கு முஸ்லிம்களாகிய நாம் உறுதுணையாக இருக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த வைபவத்தில் ஏறாவூர் நகர சபை தலைவர் அலிசாஹீர் மௌலானா மற்றும் காத்தான்குடி நகர சபையின் பிரதி தவிசாளர் எம்.எம்.ஜெஸீம், ஜனாதிபதியின் மத விவகாரங்களுக்கான இணைப்பாளர் ஹஸன் மௌலானா, காத்தான்குடி ஜாமியத்துர் றப்பானிய்யா அறபுக்கல்லூரியின் அதிபர் மௌலவி எச்.எம்.எம்.இப்றாகீம் நத்வீ, மற்றும் மௌலவி எம்.எம்.மஜீத் றப்பானி உட்பட உலமாக்கள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இரண்டு நாள் விஜயத்தை மேற் கொண்டு கிழக்கு மாகாணத்;துக்கு விஜயம் செய்த இம் மார்க்க அறிஞர் தென்கிழக்கு பல்கலைக்கழகம், மற்றும் ஏறாவூர் ஆகிய இடங்களுக்குச் சென்றமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .