2025 மே 02, வெள்ளிக்கிழமை

த.தே.கூ பிரதான எதிர்க்கட்சியாகும்: யோகேஸ்வரன் எம்.பி

Menaka Mookandi   / 2014 ஜனவரி 26 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ரவீந்திரன்

'நாட்டில் தற்போது ஐக்கிய தேசியக் கட்சி பலவீனமடைந்துவரும் நிலைமையில்  தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, நாட்டின் பிரதான எதிர்க் கட்சியாகும் நிலைமை உருவாகி வருவதாக' கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, திருப்பளுகாமம் இந்து கலாமன்றத்தின் 35ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று (25) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே யோகேஸ்வரன் எம்.பி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'நான் நினைக்கின்றேன் இன்னும் சொற்ப காலத்திலே ஐக்கிய தேசிய கட்சியில் இருப்பவர்கள் கூட அரசாங்கத்தின் பக்கம் தாவுவார்களாக இருந்தால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரதான எதிர்க்கட்சியாக மாறும்' என்றார்.

'அந்த நிலமை ஏற்பாடுமாயிருந்தால் முன்பு அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தது போன்று சம்பந்தன் ஐயா எதிர்க் கட்சித் தலைவராக இருக்க வேண்டிய ஒரு சூழல் உருவாகலாம்' என்று யோகேஸ்வரன் எம்.பி மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .