2025 மே 02, வெள்ளிக்கிழமை

பாடசாலை நூலக மேல்மாடி கட்டிடம் திறப்பு

Super User   / 2014 ஜனவரி 28 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கல்வி அமைச்சின் சுமார் 70 இலட்சம் ரூபா செலவில் காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட நூலக மேல்மாடி கட்டிடம் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் நேற்று திறந்துவைக்கப்பட்டது.

காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலை அதிபர் எம்.சி.எம்.எ.சத்தார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த கட்டிடம் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் முயற்சியினால் கல்வி அமைச்சின்; நிதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .