2025 மே 02, வெள்ளிக்கிழமை

இரு இளைஞர்களின் சடலங்கள் கரையொதுங்கின

Menaka Mookandi   / 2014 ஜனவரி 28 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு பனிச்சையடிக் கடலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (26) காணாமல் போன மூன்று இளைஞர்களில் இருவரின் சடலங்கள் சவுக்கடி கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் இன்று கண்டுபிடிக்கப்பட்டன.

பனிச்சையடிக் கடலில் குளித்துக் கொண்டிருந்த 7 இளைஞர்களில் மூன்று இளைஞர்கள், நீரில் மூழ்கிய நிலையில் காணாமல் போயினர். இவர்களை தேடும் நடவடிக்கை இடம்பெற்று வந்த நிலையில் இன்று சவுக்கடி கடற்கரையோரத்தில் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.

மட்டக்களப்பு ஊறணியைச் சேந்த ரகுநாதன் டானியல் (23) பனிச்சையடியைச் சேர்ந்த ஜரோம் அனிஸ்ட்டன் (20) ஆகியோரின் சடலங்களே இவ்வாறு கரையொதுங்கியுள்ளன.

இதில் மட்டக்களப்பு எல்லை வீதியைச் சேர்ந்த பிரதீப் என்பவரின் சடலம் இதுவரை கண்டெடுக்கப்படவில்லை எனவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .