2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

மோட்டார் சைக்கிள் மோதியதில் பெண் மரணம்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 02 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், ரி.எல்.ஜவ்பர்கான்,தேவ அச்சுதன்,எஸ்.ரவீந்திரன்

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள  பெரிய கல்லாறில் மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் பெரிய கல்லாறைச் சேர்ந்த தம்பிமுத்து மனோன்மணி (வயது 71) என்பவர்; மரணமடைந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று சனிக்கிழமை (1) மாலை  வீதியால் மேற்படி வயோதிபப் பெண்  நடந்து சென்றுகொண்டிருந்தபோது விபத்திற்குள்ளானார்.

இதில் காயமடைந்த இவரை உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தபோதிலும், இவர் மரணமடைந்துவிட்டதாக பொலிஸார் கூறினர்.

இதேவேளை, மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற நபரை  கைதுசெய்து விசாரணை மேற்கொள்வதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .