2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

முன்னாள் மாநகர சபை உறுப்பினரின் வீட்டில் திடீர் சோதனை

Super User   / 2014 பெப்ரவரி 02 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி நகர சபை உறுப்பினர் அலி சப்ரியை நேற்றிரவு தாக்கியதாக கூறப்படும் சந்தேகநபர் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் என்.கே.றம்ழானின் வீட்டில் இருப்பதாக எமக்கு கிடைத்த தகவல்களை அடுத்து அந்த வீட்டை இன்று அதிகாலை சோதனைக்கு உட்படுத்தியதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தை சேர்ந்த ஐந்து பொலிஸார் இன்று அதிகாலை 1.30 மணியளவிலிருந்து சுமார் ஒரு மணித்தியாலயம் சோதனைக்கு உட்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

"தகவல்களின் அடிப்படையிலேயே குறித்த நபரின் வீட்டை சோதனை செய்தோம். எனினும் இதன்போது நகர சபை உறுப்பினரை தாக்கிய சந்தேகநபர் இருக்கவில்லை" என்றனர் பொலிஸார்.

இதேவேளை, தனது வீட்டை சோதனைக்கு உட்படுத்தியமை  தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறையிடவுள்ளதாக மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள என்.கே.றம்ழான் தெரிவித்தார்.

புதிய காத்தான்குடி பதுறியா ஜும்ஆ பள்ளிவாயல் குறுக்கு வீதியிலுள்ள தனது வீட்டுக்கு முன்னாள் இரவு ஒன்பது மணியளவில் நின்று கொண்டிருந்தபோது அந்த வீதியினால் மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவர் தனது தலைகவசத்தினால் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.அலி சப்ரியை தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த நகர சபை உறுப்பினர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .