2025 மே 02, வெள்ளிக்கிழமை

மக்களிடம் திட்டங்களை பெற்று அபிவிருத்திகளை மேற்கொள்ள தீர்மானம்: ஹிஸ்புல்லா

Kogilavani   / 2014 பெப்ரவரி 04 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


'மக்களின் காலடிக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டு அவர்களிடமிருந்து திட்டங்களை பெற்று அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ள வேண்டுமென்ற ஒரு புதிய நடைமுறையை எமது பொருளதார அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது' என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் திங்கட்கிழமை தெரிவித்தார்.

'அந்த வகையில் உங்கள் காலடிக்கு நாங்கள் வந்து எவ்வாறான அபிவிருத்திகள் மேற்கொள்ள வேண்டும் என்ன பிரச்சினைகள் உள்ளன என கேட்டு அதை அடையாளப்படுத்தி வருகின்றோம்' என்றும் அவர் தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் மக்களின் கருத்துக்களை பெறுவதற்காக காத்தான்குடி முதலாம் கறைச்சி அந்/நாசர் வித்தியாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதியமைச்சர் ஹிஸபுல்லாஹ் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'பொருட்களுக்கான விலைகளை அரசாங்கம் அதிகரிக்கவில்லை. உலக சந்தையில் பொருட்களின் விலை அதிகரிப்பதனாலேயே இலங்கையிலும் விலை அதிகரிக்கின்றது. 

'நாளந்தம் பொருட்களுக்கான விலை அதிகரிக்கப்பட்டு வருகின்றது. தற்போது பால்மாக்களின் விலை ஒரு கிலோவுக்கு 152வால் அதிகரிக்கப்பட்டுள்ளது. பால்மா உற்பத்தி நிறுவனங்கள் இந்த விலையை அதிகரிப்பு செய்துள்ளன.

ஒருபோதும் அரசாங்கமோ ஜனாதிபதியோ பொருட்களுக்கு விலை அதிகரிப்பதை விரும்;பவில்லை. மக்களுக்கு மிக குறைந்த விலையில் பொருட்களை வழங்க முடியுமாக இருந்தால் ஜனாதிபதியும் அரசாங்கமும் அதையே விரும்பம்.

அரசாங்கத்தை குறை கூறுவதைவிட்டு விட்டு நமது வருமானத்தை நாம் அதிகரிக்க வேண்டும். கணவனும் மனைவியும் தொழில்  செய்யவேண்டும். ஏதாவது ஒரு தொழிலை செய்ய வேண்டும். இன்று கணவன் மனைவி இருவரும் உழைத்தால் கூட வாழக்கைச் செலவு போதுமானதாக இல்லை.

வறுமையை போக்க நமது வருமானத்தை அதிகரிக்க வேண்டும். குடும்ப வருமானத்தை அதிகரிக்கச் செய்ய ஏதாவது ஒரு கைத்தொழில் அல்லது சுய தொழிலில் ஈடுபட வேண்டும்.

இந்த வருடம் வறுமையை குறைப்பதற்கான வேலைத்திட்டத்தினையே பொருளதார அபிவிருத்தி அமைச்சு மேற்கொள்ளவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் வறுமை நிலையில் முதலாவதாக உள்ள மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவு வறுமையில் முதலிடமாகவுள்ளது.

இந்த வறுமை நிலையினை போக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அபிவிருத்தி என்பது வெறும் கட்டடங்களாலோ வீதி அமைப்பதாலோ அபிவிருத்தியடைந்து விட முடியாது. தனிமனித வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். வறுமையில் வாடும் குடும்பங்களை இனம்கண்டு அவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் செய்யப்படவேண்டும். அம்மக்களை கல்வி ரீதியாக உயர்த்த பாடுபட வேண்டும். எமது பிரிவுகளில் அன்றாடம் சாப்பிட வசதியில்லாத குடும்பங்கள் இருப்பதாக நான் அறிகின்றேன.; மாதாந்தம் மின்சாரக்கட்டணம்; செலுத்துவதற்கு கூட வசதியில்லாத குடும்பங்கள் இருப்பதாகவும் எனக்கு அறியக்கிடைத்துள்ளது.

குறைந்தது ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலிருந்தும் 10 குடும்பங்களை அடையாளப்படுத்தி அவர்களை வாழ்வாதார ரீதியாக உயர்த்த வேண்டியுள்ளது.

மக்களின் காலடிக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டு அவர்களிடமிருந்து திட்டங்களை பெற்று அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ள வேண்டுமென்ற ஒரு புதிய நடைமுறையை எமது பொருளதார அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அந்த வகையில் உங்கள் காலடிக்கு நாங்கள் வந்து எவ்வாறான அபிவிருத்திகள் மேற்கொள்ள வேண்டும். என்ன பிரச்சினைகள் உள்ளன என கேட்டு அதை அடையாளப்படுத்தி வருகின்றோம்' என அவர் மேலும் தெரிவித்தார்

இக் கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக், காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் மற்றும் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியேகாத்தர்கள், முக்கியஸ்த்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X