2025 மே 02, வெள்ளிக்கிழமை

யானை தாக்குதல்; தீர்வு காண விசேட கூட்டம்

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 07 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் யானையின் தாக்குதல்கள் காரணமாக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் எதிர்வரும் 17ஆம் திகதி உயர்மட்ட கூட்டமொன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.

வன ஜீவராஜிகள் அமைச்சில் அமைச்சர் விஜயமுனி சொய்சாவினை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பில் அமைச்சின் செயலாளர் உடனி விக்ரமசிங்க, வனஜீவராஜி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரத்நாயக்க உட்பட அதிகாரிகள் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா,

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் ஏற்பட்டுள்ள பாரியளவிலான யானைகளின் தாக்குதல்கள் அதனால் ஏற்பட்ட சொத்தழிவு மற்றும் உயிரிழப்புகள் குறித்த அமைச்சருக்கு இதன்போது விரிவாக எடுத்துக்கூறினேன்.

குறிப்பாக இந்த யானையின் தாக்குதல்கள் காரணமாக படுவான்கரை பகுதி மக்கள் கடந்த காலத்தில் எதிர்நோக்கிவந்த பல்வேறு கஸ்டங்கள் தொடர்பில் எடுத்துக்கூறினேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் அவற்றினை கட்டுப்படுத்துவதற்கு போதுமான ஆளணி இன்மை மற்றும் உபகரணங்கள் இன்மை தொடர்பிலும் அவரிடம் தெரிவித்தேன்.

கடந்த காலத்தில் பல தடவைகள் ஆராயப்பட்டுள்ளபோதிலும் நடவடிக்கைகள் எதுவும் அற்ற நிலையே இருந்துவருகின்றது.இதனை தடுத்து மக்களின் இயல்புவாழ்க்கையை உறுதிப்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு அவரிடம் கேட்டுக்கொண்டேன்.

இது தொடர்பில் பதில் அளித்த அமைச்சர்,இது தொடர்பில் ஆராய மட்டக்களப்புக்கு வருகைதருவதாகவும் அங்கு ஆராய்ந்து அது தொடர்பில் நடைமுறைப்படுத்தல்களை மேற்கொள்வோம்.
10ஆம் திகதி இந்த கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.

அந்த தினத்தில் எமது செயலாளர்கள் மற்றும் பணிப்பாளர் வெளிநாடு செல்லவிருப்பதால் அந்த திகதியை எதிர்வரும் 17ஆம் திகதியாக மாற்றி இந்த கூட்டத்தினை மாவட்ட செயலகத்தில் நடத்துவோம். அந்த கூட்டத்துக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளையும் அழைப்போம் எனவும் அமைச்சர் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .