2025 மே 08, வியாழக்கிழமை

நீரின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

Kogilavani   / 2014 மார்ச் 24 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

உலக நீர் தினத்தையொட்டி நீரின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்று ஞாயிற்றுக்கிழமை (23) காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அறபுக் கல்லூரியில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கின் எற்பாட்டில் நடைபெற்ற இந்த வைபவத்தில் மாகாண மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அறபுக்கல்லூரியின் உப அதிபர் மௌலவி எம்.எச்.எம்.புகாரி, காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஐ.எம்.சுபைர் மற்றும் விரிவுரையாளர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது துஆ பிராத்தனையும் நடைபெற்றதுடன் பிராத்தனையை மௌலவி ஏ.ஜி.எம்.அமீன் பலாஹி நடாத்தினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X