2025 மே 08, வியாழக்கிழமை

காத்தான்குடியில் இரண்டாம் கட்ட அமர்வு

Suganthini Ratnam   / 2014 மார்ச் 25 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணத்திற்கான இரண்டாம் கட்ட அமர்வு மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறுமென  காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பராக்கிரம பரணகம தெரிவித்தார்.

காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவைச் சேர்ந்தவர்களுக்கும்  கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக்கிற்கும் இடையில் ஆணைக்குழுவின் கொழும்பு அலுவலகத்தில் திங்கட்கிழமை (24) சந்திப்பு நடைபெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. 

மேலும், 1990ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின்  குருக்கள்மடத்தில் காணாமல் போனோர் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடத்தை தோண்டுவது தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டதுடன், இதற்காக  சட்ட மா அதிபரின் ஆலோசனை பெறுவதென்று தீர்மானிக்கப்பட்டதாகவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X