2025 மே 08, வியாழக்கிழமை

கிழக்கு பல்கலை கற்கை நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

Kanagaraj   / 2014 மார்ச் 25 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்,க.ருத்திரன்


கிழக்குப் பல்கலைக் கழகத்தில் தோன்றியுள்ள நெருக்கடி நிலை காரணமாக விவாதித்து முடிவெடுப்பதற்கு இன்று கூடிய கிழக்குப் பல்கலைக்கழக கவுன்ஸில் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சகல கற்கை நடவடிக்கைகளையும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்திக் கொள்வது என்று தீர்மானம் எடுத்துள்ளதாக உப வேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

இந்தத் தீர்மானத்தின் பிரகாரம் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் விடுதிகளில் தங்கியுள்ள சகல மாணவர்களும் இன்று பிற்பகல் 4 மணிக்கு முன்னதாக வெளியேறி விட வேண்டும் என்று அதில் கோரப்பட்டிருந்தது.

இந்தத் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கற்கை மேற்கொள்ளும் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட பெரும்பான்மையினத்தைச்தேர்ந்த மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் இன்று மாலை ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் உப வேந்தரின் காரை வளாகத்திலிருந்து வெளியேற விடாமல் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

பல்கலைக் கழகத்தின் புதிய நுழைவாயிலினூடாக உப வேந்தர் வெளியேறி விடா வண்ணம் வெளிச் செல்லும் வேறு கார்களையும் ஆர்ப்;பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சோதனையிட்டனர்.

இறுதியாக பல்கலைக் கழகப் பாதுகாப்புக்கு பிற்பகல் நான்கு மணிக்குப் பின்னர் பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

பல்கலைக்கழக விடுதிகளிலிருந்து இன்று மாலை 4 மணியுடன் சகல மாணவர்களும் வெளியேறி விட வேண்டும் என்ற தீர்மானம் நாளை காலை ஆறு மணியோடு சகலரும் வெளியேறிவிட வேண்டும் என்று தளர்த்தப்பட்டதால் மாணவர்கள் இன்று மாலை 6.15 மணியளவில் தமது ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

பெரும்பான்மையின  மாணவர்கள் தம்மீது தாக்குதல் மேற்கொண்டதால் சகல தமிழ் மாணவர்களும் இருவாரகால வகுப்புப் பகிஷ்கரிப்பை தீர்மானித்து தமது விடுதிகளை விட்டு கடந்த வியாழக்கிழமையுடன் விடுதிகளிலிருந்து வெளியேறி சொந்த ஊர்களுக்குச் சென்று விட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X