2025 மே 08, வியாழக்கிழமை

யானை தாக்குதல்: மயிரிழையில் உயிர் தப்பிய மூவர்

Kogilavani   / 2014 மார்ச் 26 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


மட்டக்களப்பு, மாவட்டத்தின் எல்லைக் கிராமமான புனானை- ரெதிதென்ன  கிராமத்திற்குள் புதன்கிழமை (26) அதிகாலை உற்புகுந்த யானை ஒன்று பிரதேசத்தில் பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் இச்சம்பவத்தில் மூவர் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

காட்டுப் பகுதியில் இருந்து அதிகாலை 2 மணியளவில் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்த யானை வீடொன்றின் சுவரை உடைத்துள்ளதுடன் நெல் மூடைகளை சேதப்படுத்தியுள்ளது.

யானை வீட்டின் சுவரை உடைத்த போது வீட்டில் தாயும் இரண்டு பிள்ளைகளும் உறங்கிக் கொண்டிருந்ததாகவும் மயிரிலையில் அவர்கள் உயிர்தப்பியதாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர். 

ரெதிதென்ன கிராமத்திற்கு அருகில் உள்ள கிலச்சிமடு மற்றும் ஓமடியாமடு காட்டுப் பகுதிகளில் இருந்தே யானைகள் குடியிருப்புக்குள் வருவதாகவும் இரவு நேரங்களில் பயத்துடனே இருக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் பிரதேச வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

யானையினால் ஏற்பட்ட சேத விபரங்களை பிரதேச செயலக அதிகாரிகள் திரட்டி வருவதாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X