2025 மே 08, வியாழக்கிழமை

மட்டு. மாநகர சபை டெங்கு வலயமாக பிரகடனம்

Kogilavani   / 2014 மார்ச் 27 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாநகர சபை பகுதி டெங்கு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமார் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிவித்தலில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'மட்டக்களப்பு மாநகர சபை பிரிவிற்குட்பட்ட நாவற்குடா பொதுச் சுகாதாரப் பகுதியில் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்கானப்பட்டுள்ளனர்.
இதனால், இப்பிரதேசத்தில் எதிர்வரும் 31 ஆம் திகதி   வீடுகள், சுற்றப்புறச் சூழல்கள் என்பன பரிசோதனை செய்யப்படவுள்ளன.

மட்டக்களப்பு மாநகர சபை, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம், பிரதேச செயலகம், பொலிஸ் நிலையம், பொது அமைப்புக்களினால் இந்த பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இப்பரிசோதனை நடவடிக்கையின்போது டெங்கு நுளம்பு பரவக் கூடிய வகையில் சூழல் காணப்படின் உரியவர்களுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அன்றைய தினம் இந்த நாவற்குடா பிரதேசத்தில் வீடுகள் காணிகள் பரிசோதனை செய்யப்படும்போது வீட்டு உரிமையாளரோ அல்லது பொறுப்பு வாய்ந்த ஒருவரோ பிரசன்னமாகியிருக்க வேண்டும்.

பரிசோதனை நடவடிக்கையுடன் மாபெறும் சிரமதானமொன்றும் அன்றைய தினத்தில் இப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X