2025 மே 08, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் சித்திரைப் புத்தாண்டு சந்தை

Kanagaraj   / 2014 ஏப்ரல் 03 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


ஹற்றன் நசனல் வங்கியின் கிராமிய எழுச்சி திட்டத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சியாளர்களுக்காக  சித்திரைப் புத்தாண்டு சந்தை கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இன்று (3) மட்டக்களப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலுள்ள தொழில் முயற்;சியாளர்களின் உற்பததிப் பொருட்களான உணவுப்பொருட்கள், மரமுந்திரிகை, பன்னினால் செய்யப்பட்ட பாவனைப்பொருட்கள், கைத்தறி உடைகள், பூமரங்கள், கைப்பணிப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு உற்பத்திப் பொருட்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

கிழக்கு மாகாணத்திலுள்ள ஹற்றன் நசனல் வங்கிகளினூடாக நுண கடன்களைப் பெற்று தங்களது தொழில்களை விருத்தி செய்தவர்களின் ஆக்கங்கள் மற்றும் படைப்புக்கள் இதில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

ஹற்றன் நசனல் வங்கியின் கிழக்கு பிராந்திய சிரேஷ்ட முகாமையாளர் எஸ். ஜெயராசா, வங்கிக் கிளையின் முகாமையாளர் எஸ். ரமணதாஸ்  கடன் அறவீட்டு பிரதிப் பொது முகாமையாளர் லசந்த பெர்ணான்டோ, பாரம்பரிய சிறுகைத்தொழில் அமைச்சரின் தேசிய இணைப்பாளர் க. தங்கேஸ்வரி ஆகியோர் கடன்கள், மீனபிடி வலைகள் மற்றும் உழவு இயந்திரம் என்பன வழங்கப்பட்டன.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X