2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

டெங்கு அபாயம்: கல்விநிலையங்களுக்கு பூட்டு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 12 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியில் டெங்கு நோய் பரவுவதை தடுக்கும் பொருட்டு காத்தான்குடியின் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் அரச மற்றும் தனியார் பாடசாலைகள் குர் ஆன் மதரசாக்கள் மற்றும் பிரத்தியேக கல்வி நிலையங்கள் என்பவற்றை மறு அறிவித்தல் வரை மூடுமாறு காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவித்தல் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீனினால் கையொப்பமிட்டு விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வறித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது அன்மைக்காலமாக காத்தான்குடி பிரசேத்தில் டெங்கு நோயினால் பீடிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் குறிப்பாக அதிகளவில் மாணவர்கள் பாதிக்கப்பட்டமை இணங்கானப்பட்டுள்ளதுடன் உயிரிழப்பும், ஏற்பட்டுள்ளது.

மேலும் பல மாணவர்கள் வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மிகவும் பெறுமதிவாய்ந்த மாணவர் சமூகத்தின் உயிர்களை காக்கும் நோக்கில் தீவிர தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக காத்தான்குடி பிரதேசத்திலுள்ள இலக்கம் 165, 165பி, 166, 166ஏ, 167, 167ஏ, 167சி, 167இ, ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுள்ள காத்தான்குடி முதலாம் குறிச்சி மற்றும் புதிய காத்தான்குடி ஆகிய பிரதேசங்களில் இயங்கிவரும் அரச தனியார் பாடசாலைகள் மற்றும் குர் ஆன் மரசாக்கள் மற்றும் பிரத்தியேக கல்வி நிலையங்கள் என்பவற்றை மூடுமாறும் உடனடியாக மேற் குறித்த நிறுவனங்கள் மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்கள் நுளம்புகள் அற்ற பிரதேச மாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை மேற் கொண்டு காத்தான்குடி சுகாதார அலுவலகத்திற்கு எழுத்து மூலம் அறிக்கை செய்து பொது சுகாதார பரிசோதகரின் அங்கீகாரத்துடன் இந் நிறுவனங்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் இதை மீறுவோருக்கு எதிராக 2009ம் ஆண்டு 11ம் இலக்க நுளம்பு பெருக்கத் தடைசட்டத்தின் படியும், தொற்று நோய் தடைச்சட்டத்தின் படியும் நடவடிக்கை எடுக்கப்படுமென அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி பிரதேசத்தில் மேற்படி 8 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அவசர தொற்று நோய் தடுப்பு பிரதேசங்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் 10.4.2014 வியாழக்கிழமை வரை காத்தான்குடி பிரதேசத்தில் 25 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அதில் ஒரு சிறுமி புதிய காத்தான்குடி பிரதேசத்தில் உயிரிழந்துள்ளதாகவும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.

இது தொடர்பாக மக்களை விழிப்பூட்டும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருவதுடன் இந்த அறிவித்தல் காத்தான்குடியிலுள்ள ஜும் ஆப்பள்ளிவாயல்கள் மற்றும் பள்ளிவாயல்களின் ஒலி பெருக்ககளில் அறிவிப்பதற்கும் ஜும் ஆ தொழுகையின் பின்னர் அறிவிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .