2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

சிறுவர் பாதுகாப்பு மற்றும் தாய்மார்களுக்கு பாதுகாப்பான புலம்பெயர்தல் செயலமர்வு

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 22 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


சிறுவர் பாதுகாப்பு மற்றும் தாய்மார்களுக்கு பாதுகாப்பான புலம்பெயர்தல் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் செயலமர்வு மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதே செயலகத்தில் திங்கட்கிழமை (21) நடைபெற்றது.

சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தால் நடத்தப்பட்ட இச்செயலமர்வில் வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு,  பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது  சிறுவர் உரிமை மேம்பாட்டு மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் வி.குகதாசன், வவுணதீவு பிரதே செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தயோகத்தர் ரி.பிரபாகரன் ஆகியோர் விரிவுரையாற்றினர்.

சிறுவர் பாதுகாப்பு மற்றும் தாய்மார்களுக்கு பாதுகாப்பான புலம்பெயர்தல் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் செயலமர்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்கள் தோறும் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .