2025 மே 12, திங்கட்கிழமை

அபிவிருத்திக்காக எவரையும் ஆதரிக்க வேண்டாம்- அரியநேத்திரன்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 26 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மாணிக்கப்போடி சசிகுமார்

அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு அபிவிருத்திக்கு ஒத்துளைப்புச் செய்கின்றார்கள் என்பதற்காக எவரையும் நீங்கள் ஆதரிக்கக் கூடாது உணர்வு ரீதியாக எமது இனம் எமது உரிமை என்ற உணர்வின் அடிப்படையில் சிந்தித்து அதனடிப்படையில் ஆதரிக்க வேண்டும் என நாடாளுமன்றஉறுப்பினர் பா.அரியநேத்திரன் கரையாக்கந்தீவு ஆலய முன்றலில் இடம்பெற்ற பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது உரையாற்றுகையில் வெள்ளிக்கிழமை (25) தெரிவித்தார்.


அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,எம் மக்கள் ஒவ்வொருவருக்கும் எமது இனம் எமது மக்கள் எமது உரிமை என்ற உணர்வு இருக்க வேண்டும். அபிவிருத்திக்காக உதவுகின்றனர்.அபிவிருத்தி செய்து தருவதாகக் கூறுகின்றனர் என்பதற்காக எவரையும் எவரும் ஆதரிக்கக் கூடாது நான் தங்களுக்கு சிறிய உதவி செய்தன் என்பதற்காகவோ தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நிதி ஒதுக்கீடு செய்தார்கள் என்பதற்காகவோ நீங்கள் எங்களை ஆதரிக்கக் கூடாது.அதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு போதும் விரும்பியதில்லை. நாங்கள் உதவுகின்றோம் என்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்க வேண்டாம்.

உணர்வு ரீதியாக ஒவ்வொருவரும் சிந்தித்தால் போதும் அப்போது யாரை ஆதரிக்க வேண்டும் என்பது எங்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் அதனடிப்படையில் எதிர்காலத்தில் செயற்பட வேண்டும்.

அபிவிருத்தி என்ற போர்வையில் சமூர்த்தி வங்கியில் உள்ள பணங்கள் எடுக்கப்பட்டு அரசாங்க அமைச்சர்களுக்கு தலா மூன்று கோடி ரூபா வீதம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

எதிர்கால தேர்தலை இலக்காகக் கொண்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீடு என்ற போர்வையிலேயே எமது பிரதேசத்தில் உள்ள சமூர்த்தி வங்கிகளில் உள்ள நிதியினையே எடுத்து அரச அமைச்சர்களுக்கு அரசாங்கம் வழங்கவுள்ளது.

இது உங்கள் பணம் அதனைக் கொண்டு அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதற்காக அவர்கள் அபிவிருத்தி வேலைகளைச் செய்கின்றார்கள் என்று அவர்களை ஆதரிக்க வேண்டும் என்றும் இல்லை.

ஒவ்வொரு சமூர்த்தி வங்கிகளிலும் இருந்து நிதி எமுக்கப்பட்டு அமைச்சர்களுக்கு வழங்கப்படவுள்ளது.தமிழ் பிரதேசத்தில் இருந்து கூடுதலான நிதி பெறப்பட்ட போதும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு தமிழ் அமைச்சருக்கு மூன்று கோடி ரூபாவும் வழங்கப்படவுள்ள நிலையில் ஆறு கோடி ரூபா இரண்டு முஸ்லிம் அமைச்சர்களுக்கு வழங்கப்படவுள்ளது எனவும் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X