2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'அன்பு' ஒன்றியத்தின் வருடாந்த ஓன்றுகூடல்

Super User   / 2014 மே 05 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


கோட்டைக்கல்லாறு 'அன்பு' ஒன்றியத்தின் வருடாந்த ஓன்றுகூடல் ஞாயிற்றுக்கிழமை (04) கோட்டைக்கல்லாறு தெற்கு பல்தேவைக்கட்டடத்தில் நடைபெற்றது.

ஒன்றியத்தலைவரும் ஓய்வு நிலை தபாலதிபருமான வே.கனகரெத்தினம்  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொறியியலாளர் மு.வடிவேல் நீர்பாசனத்திணைக்கள பிரதிப்பணிப்பாளர்  சிரேஷ்ட தாதி உத்யோகஸ்தர் க.சோதிஸ்வரன் ஆகியோரின் சமூக சமய சேவைகளை பாராட்டி கௌரவிப்பும் வாழ்த்துப்பாவும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் இதன்போது அண்மையில் ஓய்வு பெற்ற கிழக்கு பல்கலைக்கழக பதவிநிலை உத்தியோகஸ்தர் தேசகீர்த்தி கலாநிதி க.நீதிராஜாவின்  சேவையை பாராட்டி அன்பு ஒன்றியத்தினரால் அன்பளிப்பும் வழங்கி கௌரவிக்கப்பட்ர்.

இந்நிகழ்வில் ஒன்றிய உறுப்பினர்கள் பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X