2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நடமாடும் சேவை

Super User   / 2014 மே 06 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வாழ்வெழுச்சி திட்டத்தின் கீழ் கிராமம் கிராமமாக வீடுவீடாக நடமாடும் சேவையின் கீழ் மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடமாடும்சேவைகள் நடத்தப்பட்டுவருகின்றன.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சரின் ஆலோசனையின் பேரில் கிராம மட்டத்தில் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் அவர்களின் காலடிக்கு சென்று பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் இந்த நடமாடும்சேவைகள் நடத்தப்பட்டுவருகின்றன.

இதன் கீழ் மீள்குடியேற்ற பிரதியமைச்சரும் களுவாஞ்சிகுடி பிரதேச அபிவிருத்திக்குழு தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரனின் வழிகாட்டலின் கீழ் முதலாவது நடமாடும் சேவை இன்று செவ்வாய்க்கிழமை (06) குருக்கள்மடம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் கலாநிதி மா.கோபாலரட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த நடமாடும் சேவையில் திணைக்களங்களின் தலைவர்கள், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் செயலாளர் திருமதி வசந்தராசா, திணைக்கள பணிப்பாளர்கள், கிராம சேவையாளர்கள், திவிநெகும உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது ஆட்பதிவு திணைக்களம், விவசாய திணைக்களம், காணித்திணைக்களம், திவிநெகும திணைக்களம், பொலிஸ் திணைக்களம், பதிவாளர் திணைக்களம், இலங்கை மின்சாரசபை, பிரதேசசபை, நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை உட்பட பல்வேறு திணைக்களங்கள் சேவைகளை வழங்கின.

இதன்போது வறுமையானவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் வாழ்வின் எழுச்சி சமூதாய அபிவிருத்தி அடிப்படை வங்கியின் ஊடாக எட்டு இலட்சம் ரூபா கடன்களும் வழங்கிவைக்கப்பட்டன.

அத்துடன் காணி உறுதிகள் அற்ற 26 குடும்பங்களுக்கு ரண்விம காணி உறுதிகளும் பிரதேச செயலாளரினால் வழங்கிவைக்கப்பட்டன.

இதன்போது நூற்றுக்ணக்கான பொதுமக்கள் வருகைதந்து நடமாடும் சேவைகளை பெற்றுகொண்டதாக பிரதேச செயலாளர் கோபாலரட்னம் தெரிவித்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X