2025 மே 02, வெள்ளிக்கிழமை

வீரர்களுக்கு 'ரட்டவிருவோ'கடன் வழங்கிவைப்பு

Kanagaraj   / 2014 மே 24 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


வெளிநாட்டு தொழில் வீரர்களுக்கு 'ரட்டவிருவோ'கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் வவுணதீவுப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட புதுமண்டபத்தடி மற்றும் கரவெட்டி வாழ்வெழுச்சி சமூதாய அடிப்படை வங்கிகளினால் கடந்த செவ்வாய்க்கிழமை(20) வழங்கிவைக்கப்பட்டது.

மண்முனை மேற்கு திவிநெகும முகாமைத்துவப் பணிப்பாளர் ரி.சத்தியசீலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தலா மூன்று இலட்சம் ரூபா வீதம், மூன்று பேருக்கு வீடமைப்பு கடன்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இதன்போது, மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர்,வங்கி முகாமையாளர்களான க.தில்லையம்பலம், எம்.மணிவண்ணன் மற்றும் திவிநெகும உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X