2025 மே 02, வெள்ளிக்கிழமை

மாபெரும் சிரமதானப்பணி

Kanagaraj   / 2014 மே 24 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று சனிக்கிழமை(24)  சிரமதானப்பணி ஒன்று முன்னெடுக்கபட்டது.

களுவாஞ்சிகுடி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த ரத்திநாயக்கவின் ஏற்பாட்டின் கீழ் கொக்கட்டிச்சோலை, வெல்லாவெளி.
களுவாஞ்சிகுடி ஆகிய பொலிஸ் நிலைய உத்தியோகஸ்தர்கள், மற்றும், களுவாஞ்சிகுடி விஷேட அதிரடிப்படையினர், களுவாஞ்சிகுடி வீதி அபிவிருத்தி அதிகார சபையினர், பிரதேச சபை, நீர்ப்பாசனத் திணைக்களம், ஆகியன இணைந்து இச்சிரமதானப் பணியினை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, நீதிமன்ற வளாகம், அதனுள் அமைந்துள்ள பழைய தபாலகக் கட்டடம், என்பன சுத்தம் செய்யப்பட்டதோடு, அருகில் அமைத்திருந்த வாய்கால்களும் நீர் வழிந்தோடும் வகையில் துப்பரவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X