2025 மே 02, வெள்ளிக்கிழமை

பழுதடைந்த படகு உரிமையாளர்களுக்கு நஷ்டஈடு வழங்குமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2014 மே 25 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில்  மீன்பிடி இயந்திரப் படகுகளுக்கு பயன்படுத்திய கலப்படம் செய்யப்பட்ட  மண்ணெண்ணையால், பழுதடைந்த இயந்திரப் படகுகளின்   உரிமையாளர்களுக்கு நஷ்ஈடு வழங்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா  கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸிடமே அவர் சனிக்கிழமை (24) கேட்டுக்கொண்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி, மண்முனைப்பற்று, பாலமுனை, நாவலடி போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்களின் இயந்திரப் படகுகளுக்கு கடந்த புதன் (21), வியாழன் (22) ஆகிய தினங்களில் பயன்படுத்திய மண்ணெண்ணையால் 160 இற்கும் மேற்பட்ட  படகுகளின் இயந்திரங்கள் பழுதடைந்ததாக மீனவர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனால்,  தாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியதாகவும் இம்மீனவர்கள் கூறினர். அத்துடன், தங்களது தொழிலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், 05 மில்லியன் ரூபாவுக்கு மேல் நஷ்டம்  ஏற்பட்டதாகவும் இம்மீனவர்கள் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறு கலப்பட மண்ணெண்ணையால் படகு இயந்திரங்கள் பழுதடைந்தமை தொடர்பில் மீன்பிடிச் சங்கப் பிரதிநிதிகள் தனது கவனத்திற்கு கொண்டு வந்ததுடன், மீனவர்களின் ஜீவனோபாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தன்னிடம் சுட்டிக்காட்டியதாகவும் பொன். செல்வராசா தெரிவித்தார்.

அத்துடன்,  பெற்றோலிய வளத்;துறை அமைச்சர் மற்றும் மீன் பிடி அமைச்சரின் கவனத்திற்கும்  இது தொடர்பில்  கொண்டுவந்துள்ளதாகவும்; பொன். செல்வராசா கூறினார்.

இது தொடர்பில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு இதற்கான தீர்வை மீனவர்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொன். செல்வராசா  கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .