2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் பிரிவுக்கு ஆட்சேர்ப்பதாக சுவரொட்டிகள்

Kogilavani   / 2014 மே 25 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பில் பெண் உப பொலிஸ் பரிசோதகர்கள், பெண் கான்ஸ்டபல்கள் பதவிகளுக்கு சேர்ந்து கொள்ளலாம் என்ற சுவரொட்டிகளை பொலிஸார் சனிக்கிழமை (24) முதல் ஒட்டி வருகின்றனர்.

இச்சுவரொட்டிகளில், கௌரவம் மிக்க அரச சேவைக்கும் தாய்நாட்டிற்காகவும், தங்களது கடமையை நிறைவேற்றி, எதிர்காலத்திதைப் பாதுகாக்கும் பொருட்டு பெண் உப பொலிஸ் பரிசோதகர்கள், பெண் கொன்ஸ்டபல்கள் பதவிகளுக்கு இணைந்து கொள்ளமுடியும்.

மேலதிக விபரங்கள், 2014.04.11 அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. விண்ணப்ப இறுதித்திகதி 2014.06.30 ஆகும். மேலதிக தகவல்களை அறிய  011- 2505202 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி பணிப்பாளர், பொலிஸ் ஆட்சேர்ப்புப் பிரிவு, இல.375, ஸ்ரீ சம்புத்தவ ஜயந்தி மாவத்தை, கொழும்பு -6'  என குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .