2025 மே 02, வெள்ளிக்கிழமை

தொழில்நுட்ப உபகரணங்களைக் கையாள்வதற்கான பயிற்சி

Kogilavani   / 2014 மே 25 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் இறால் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள இறால் பண்ணையாளர்களுக்கு தொழில்நுட்ப உபகரணங்கiளைக் கையாள்வது தொடர்பான பயிற்சிநெறியொன்று ஞாயிற்றுக்கிழமை (25) மட்டக்களப்பு சத்துருக்கொண்டானிலுள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வட்டவான், காவத்தமுனை மற்றும் கரையாக்கன்தீவு ஆகிய இடங்களில் பெரிய இறால் பண்ணைகளை அமைத்து இறால் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள சுமார் 75 இற்கும் மேற்பட்டோர் இந்தப் பயிற்சியில் பங்குபற்றினர்.

கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் பணிப்பாளர் எஸ்.சுதாகரன் தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வில் இலங்கை நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்திக் கூட்டமைப்பின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான கலாநிதி எஸ்.தயாபரன், அந்த நிறுவனத்தின் இணைப்பாளர்களான நிமால் பத்திரனகே, ஆர்.ஜே.ஹெட்டியாராச்சி, சரத் ரொட்றிகோ, தரக்கட்டுப்பாட்டாளர் எச்.ஏ.ரீ.நிஷாதி, உயிரியலாளர் ஜி.ஜெயகௌரி, ஆய்வு உதவியாளர் எச்.எம்.ரீ.பிரியதர்ஷனி ஆகியோர் இந்தப் பயிற்சிகளை வழங்கினர்.

தொழில்நுட்ப உபகரணங்கiளைக் கையாள்வது தொடர்பான பயிற்சி நிறைவு பெற்றதும் இறால் பண்ணையாளர்களின் அமைப்பு ஒவ்வொன்றுக்கும் ஒரு மடிக்கணினியும் நீரையும், சுற்றுச் சூழல் தராதரங்களையும் மதிப்பிடக்கூடிய கருவிகள் உட்பட சுமார் ஐந்து இலட்ச ரூபாய் பெறுமதியான உபகரணத் தொகுதி வழங்கப்படும் என்று கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் பணிப்பாளர் எஸ்.சுதாகரன் தெரிவித்தார்.

சுற்றாடலுக்குப் பதிப்பேற்படாத இறால்பண்ணை அபிவிருத்தியை நோக்காகக் கொண்டே இறால் பண்ணையாளர்களுக்கு தொழிநுட்ப உபகரணங்கiளைக் கையாள்வது தொடர்பான பயிற்சிகளும் இன்னோரன்ன நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்திப் பயிற்சிகளும் இடம்பெற்று வருவதாக இலங்கை நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்திக் கூட்டமைப்பின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான கலாநிதி எஸ்.தயாபரன் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .