2025 மே 02, வெள்ளிக்கிழமை

பாரம்பரிய உணவு விற்பனை நிலையம் திறப்பு

Kogilavani   / 2014 மே 26 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்
, எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் காவியா பெண்கள் அபிவிருத்தி நிறுவகமும் இணைந்து ஏற்பாடுசெய்த பாரம்பரிய உணவு விற்பனை நிலையத்தின் திறப்பு விழாவும் கலைக்கூடல் நிகழ்வும் கல்லடி பாலம் அருகில் சனிக்கிழமை(24) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நிதித்திட்டமிடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் திறைசேரி மற்றும் நிதியமைச்சின் அதிகாரிகளும் கலந்கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறிய நிலையில் உள்ள குடும்ப பெண்களைக்கொண்டு இரண்டாவது தடவையாக மட்டக்களப்பில் இந்த பாரம்பரிய உணவகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

உல்லாசப்பயணிகளை கவரும் வகையில் இரவு வேளையில் இயங்கும் வகையில் இந்த உணவகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த உணவகத்துக்கான நிதியுதவியினை சுவிடிஸ் கூட்டுறவு அபிவிருத்தி நிறுவகம் வழங்கியுள்ளதுடன் காவியா பெண்கள் அபிவிருத்தி நிறுவகம் பணியை முன்னெடுத்து வருகின்றது.

இந்த நிகழ்வில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், உதவி மாவட்ட அரசாங்க அதிபர் ரங்கநாதன், காவியா பெண்கள் அபிவிருத்தி நிறுவகத்தின் பணிப்பாளர் திருமதி ரதி அஜித்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட கலாசார பேரவையின் ஏற்பாட்டில்; கலைக்கூடல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் இருந்துவந்த கலைஞர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தியதுடன் மூவின மக்களின் கலாசார நிகழ்வுகளும் நடத்தப்பட்டன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .