2025 மே 02, வெள்ளிக்கிழமை

பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் உயர்தர தொழில்நுட்பப்பிரிவு ஆரம்பிப்பு

Kogilavani   / 2014 மே 28 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
, வடிவேல்-சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு வலயத்திற்குட்பட்ட பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் உயர்தர தொழில்நுட்பப்பிரிவு செவ்வாய்க்கிழமை (27)  கல்வி  பிரதி அமைச்சர் மொகான் லால் கிரேரு, மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஆயிரம் பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இப்பாடசாலையில்  உயர்தர தொழில்நுட்பப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் அதிபர் வி.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கல்விச் சேவை  பிரதி அமைச்சர் மொகான் லால் கிரேரு மற்றும் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் பாடசாலை வளாகத்திலுள்ள சரஸ்வதி சிலை மற்றும் விபுலானந்தர் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்.

இதனையடுத்து கல்வி பிரதி அமைச்சர் மொகான் லால் கிரேரு தொழில்நுட்பப்பிரிவு வகுப்பறையினைத்திறந்து வைத்து மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

ஆயிரம் பாடசாலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 பாடசாலைகள் உள்வாங்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட கல்வி  பிரதி அமைச்சர் மொகான் லால் கிரேரு செவ்வாய்க்கிழமை(27) ஐந்துக்கும் மேற்பட்ட நிகழ்வுகளில் கலந்துகொண்டார். இதற்கமைவாக மட்டக்களப்பு தாழங்குடாவிலுள்ள தேசிய கல்விக் கல்லூரிக்கும் அமைச்சர் விஜயம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .