2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அரச திணைக்களங்களின் பிரதிநிதிகளுக்கான செயலமர்வு

Kogilavani   / 2014 மே 28 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எம்.அனாம்


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள அரச திணைக்களங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கான இரண்டு நாள் வதிவிடச் செயலமர்வு (திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமை) பாசிக்குடா அமயா ரிசோட்டில் இடம்பெற்றது. 

மூன்று ஆண்டுகளில் பால்நிலை தொடர்பான வன்முறைகளை முற்றாக ஒழிக்கும் நோக்கில் மாவட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் மாவட்ட செயலாளர் பி.எம்.எஸ்.சாள்சின் வழிகாட்டலில்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மாவட்டச் செயலகத்துடன் இணைந்து ஒக்ஸ்பாம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வின் வளவாளராக பால்நிலை அடிப்படையிலான செயலனியின் அங்கத்தவர் ஏ.சொர்ணலிங்கம் கலந்துகொண்டார்.

இச்செயலமர்வில் அரச திணைக்களங்களின் பிரதிநிதிகளும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுமாக 110 பேர் கலந்துகொண்டனர்.
இறுதி நாள் நிகழ்வு மாவட்டச் செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் சீ.அருளானி தலைமையில் இடம்பெற்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X