2025 மே 02, வெள்ளிக்கிழமை

சிறுவர் விழிப்புணர்வு வாகன பவனி

Kanagaraj   / 2014 மே 28 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

 
சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு  சேவைகள் திணைக்களத்தின் பணிப்புரைக்கிணங்க, மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழு ஏற்பாடு செய்த, சிறுவர் நன்னடத்தை விழிப்புணர்வு வாகன பவனி ஏறாவூரில் இன்று(28) புதன்கிழமை இடம்பெற்றது.
 
பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனிபா மற்றும் பிரதேச சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.எச் சபூஸ் பேகம் ஆகியோரின் தலைமையிலான அதிகாரிகள் வாகன பவனியை ஆரம்பித்து வைத்தனர்.
 
ஏறாவூர் பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளுக்கு செல்லும் வாகனப் பவனி, ஏறாவூர் அமீர் அலி வித்தியாலயத்தில் நடைபெறுகின்ற மாணவர்களின் நிகழ்ச்சிகளுடன் நிறைவடையவுள்ளது.

சிறுவர் உரிமை, பாதுகாப்பு என்பன தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .