2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வாகன பவணி

Kogilavani   / 2014 மே 29 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு, மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவையொட்டிய கிழக்கு மாகாணம் தழுவிய வாகன பவணி வியாழக்கிழமை(29) காலை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கல்லூரியின் பழைய மாணவர்களினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்போது, மட்டக்களப்பு பொது நூலகத்திற்கு முன்பாக நிறுவப்பட்டுள்ள மட்டக்களப்பு மெதடிஸ்த்த மத்திய கல்லூரியின் ஸ்த்தாபகர் அருட்தந்தை வில்லியம் ஓள்ட்டின் உருவச்சிலைக்கு பாடசாலையின் தற்போதைய அதிபர் மற்றும் முன்னாள் அதிபர்கள் மலர் மாலை அணிவித்தனர்.

கல்லூரியின் அதிபர் பயஸ் ஆனந்தராஜா தலைமையில் நடைபெற்ற ஆரம்ப வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிறிதரன், மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பி.அரியநேந்திரன், அருட் தந்தை கிறைட்டன் அவுட்ஸ்கோன், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார், ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அருன் தம்பிமுத்து உட்பட சமய பிரமுகர்கள், முக்கியஸ்த்தர்கள், கல்வியலாளர்கள் கலந்துகொண்டனர்.

வாகன பவணி இன்று திருகோணமலை மாவட்டத்திற்கு சென்று பின்னர் 31ஆம் திகதி ஜுன் மாதம் 2ஆம் திகதி வரைக்கும் அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் வரைக்கும் செல்லவுள்ளது.



 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X