2025 மே 02, வெள்ளிக்கிழமை

த.தே.கூ.வின் அரசியல் கருத்தரங்கு

Kogilavani   / 2014 மே 29 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.ருத்திரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அரசியல் கலந்துரையாடல் சனிக்கிழமை (31) கல்லடி உப்போடையில் உள்ள துளசி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தலைமையில் நடைபெறும் மேற்படி கருத்தரங்கில் அனைத்துலக சமூகமும், தமிழ் தேசிய அரசியலும், சமகாலப் பார்வை என்ற தலைப்பில் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமி;ழரசு கட்சியின் பொதுச் செயலாளருமான மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டவல்லுநருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர்கள் உரையாற்றவுள்ளனர்.

இக்கருத்தரங்கில் சமகால அரசியல் தொடர்பான விளக்கத்தை அறிந்து கொள்ள அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .