2025 மே 02, வெள்ளிக்கிழமை

வைத்தியசாலை அபிவிருத்தியை ஆராய குழு நியமனம்

Kogilavani   / 2014 மே 30 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர் ஆயுர்வேத வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்காக குழு ஒன்றை நியமித்திருப்பதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன் அறிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரினால் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்  இந்த அபிவிருத்திக் குழு நியமிக்கப்பட்டுள்ளது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூரின்; பணிப்பின் பேரில் ஏறாவூரைச் சேர்ந்த யூ.எல்.முஹைதீன்பாபா, ஜி.அஷ்ரப் அலி, எஸ்.எம்.கமால்தீன், எம்.பி.எம்.ஹுஸைன், எம்.எஸ்.சுபைர், ஏ.அப்துல் நாஸர், எம்.ஜிப்ரி ஆகிய எட்டுப் பேர் மேற்படி ஏறாவூர் ஆயர்வேத வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .