2025 மே 02, வெள்ளிக்கிழமை

சிவில் விமானசேவைகள் அமைச்சர் மட்டக்களப்புக்கு விஜயம்

Kogilavani   / 2014 மே 30 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், டி.எல்.ஜவ்பர்கான், எஸ்.பாக்கியநாதன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பில் 1350 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு வரும் விமான நிலையத்தின் புனரமைப்பு பணிகளை சிவில் விமானசேவைகள் அமைச்சர் பிரியங்க ஜயரட்ன வெள்ளிக்கிழமை (30) வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.

4500 அடி நீலமும், 45 மீற்றர் அகலமும் உடையதாக மட்டக்களப்பு விமான நிலையத்தின் ஓடு பாதை புனரமைக்கப்பட்டு வருகின்றது.

இதன் புனரமைப்பு வேலைகளை பார்வையிட்ட அமைச்சர் பிரியங்க ஜயரட்ன அதிகாரிகளுடன் இந்த விமான நிலையத்தின் புனரமைப்பு வேலைகள் பற்றியும் அதன் முன்னேற்றம் பற்றியும் கேட்டறிந்து கொண்டார்.

அமைச்சருடன் சிவில் விமானசேவைகள் அதிகார சபையின் தலைவர் ஜெனரல் ரொஹான்தலுவத்த, சிவில் விமானசேவைகள் பிரதம பணிப்பாளர் எச்.எம்.சி.நிமால் சிறி உட்பட அதன் அதிகாரிகள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் வருகை தந்திருந்தனர்.

மட்டக்களப்பு உள்ளூர் விமான நிலையத்தின் ஓடு பாதை விஸ்த்தரிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டு வருவதுடன் பிரயாணிகளுக்கு வசதியான மண்டபமும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .